/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஜி.எஸ்.டி., வரியை நீக்கக்கோரி மாவட்டத்தில் கடையடைப்பு
/
ஜி.எஸ்.டி., வரியை நீக்கக்கோரி மாவட்டத்தில் கடையடைப்பு
ஜி.எஸ்.டி., வரியை நீக்கக்கோரி மாவட்டத்தில் கடையடைப்பு
ஜி.எஸ்.டி., வரியை நீக்கக்கோரி மாவட்டத்தில் கடையடைப்பு
ADDED : நவ 30, 2024 05:52 AM

விருதுநகர்; மத்திய அரசு கொண்டு வந்த வாடகை ஒப்பந்த தொகையின் மேல் 18 சதவீத ஜி.எஸ்.டி., வரியை நீக்க வலியுறுத்தி விருதுநகர் மாவட்டத்தில் வணிகர் சங்கங்கள், தொழிற்துறை சங்கத்தினர் ஒன்றிணைந்து ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் நடத்தினர்.
மத்திய, மாநில அரசுகள் இணைந்து ஏற்படுத்திய வாடகை ஒப்பந்த தொகையின் மேல் 18 சதவீத ஜி.எஸ்.டி., வரி வசூல் முறையால் சொந்த கடை இல்லாமல் மாத வாடகைக்கு கடை, கோடவுன் எடுத்து தொழில் செய்யும் வியாபாரிகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வாடகை தொகை உயர்ந்து விபயாபாரிகள், மக்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு வரி விதித்ததை கண்டித்து வியாபாரிகள், வணிகர் சங்கங்கள் ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் நவ. 29ல் நடத்த அழைப்பு விடுத்தனர். அதன்படி நேற்று விருதுநகர் மெயின் பஜார், தேசப்பந்து மைதானம், மதுரை ரோடு, புல்லலக்கோட்டை ரோடு, பாவாலி ரோடு ஆகிய பகுதிகளில் உள்ள கடைகள் அனைத்தும் முழுமையாக அடைக்கப்பட்டன.
மெயின் வியாபாரிகள் சங்கத்தினர் ஜி.எஸ்.டி., வரியை ரத்து செய்ய கோரி மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். விருதுநகர் வியாபார தொழில் துறை சங்கம், வணிகர் பேரமைப்பு, மெயின் பஜார் வியாபாரிகள் சங்கம், சுமைதுாக்கும் தொழிலாளர் சங்கம் சார்பிலான கடைகளும், அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து கட்சியினரின் கடைகளும் கடையடைப்புக்கு ஆதரவை தெரிவித்து கடைகளை மூடினர்.
அருப்புக்கோட்டை
மதுரை ரோடு, அண்ணாதுரை சிலை பகுதி, விருதுநகர் ரோடு, பெரிய கடைவீதி, மெயின் பஜார் உட்பட பகுதிகளில் வியாபாரிகள் கடையடைப்பு செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
நகைக் கடைகள் எலக்ட்ரிகல் கடைகள், பென்னிங்டன் காய்கறி கடைகள், ஹோட்டல்கள் உட்பட பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்தது. டீக்கடைகள், மெடிக்கல்கள்,பால்கோவா கடைகள் வழக்கம்போல் செயல்பட்டது. கிராமப்புற மக்களின் வருகை குறைந்ததால் பஸ் ஸ்டாண்ட் கூட்டமின்றி காணப்பட்டது.
டி.எஸ்.பி. ராஜா தலைமையில் நகரின் பல்வேறு இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
சிவகாசி, சாத்துார், ராஜபாளையம், காரியாபட்டி சுற்றிய பகுதிகளிலும் முழுநேர கடையடைப்பு நடத்தப்பட்டது.