/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சுகாதார நிலையங்களில் டாக்டர்கள், நர்ஸ்கள் பற்றாக்குறை; போதிய சிகிச்சை கிடைக்காததால் பாதிப்பு
/
சுகாதார நிலையங்களில் டாக்டர்கள், நர்ஸ்கள் பற்றாக்குறை; போதிய சிகிச்சை கிடைக்காததால் பாதிப்பு
சுகாதார நிலையங்களில் டாக்டர்கள், நர்ஸ்கள் பற்றாக்குறை; போதிய சிகிச்சை கிடைக்காததால் பாதிப்பு
சுகாதார நிலையங்களில் டாக்டர்கள், நர்ஸ்கள் பற்றாக்குறை; போதிய சிகிச்சை கிடைக்காததால் பாதிப்பு
UPDATED : ஆக 18, 2025 08:06 AM
ADDED : ஆக 18, 2025 02:55 AM

மாவட்டத்தில், பல கிராமப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் டாக்டர்கள், நர்ஸ்கள் போதிய அளவில் இல்லாததால் நோயாளிகள் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். நரிக்குடி, திருச்சுழி, காரியாபட்டி, வத்திராயிருப்பு உள்ளிட்ட பல்வேறு சுகாதார நிலையங்களில் அடிப்படை மருத்துவ வசதிகள் கூட இல்லாததால் மக்கள் வேதனை அடைந்து வருகின்றனர். காய்ச்சல், ரத்த அழுத்தம், பிரசவம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு மதுரை, விருதுநகர், அருப்புக்கோட்டை உள்ளிட்ட மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை இருந்து வருகிறது.
பல நேரங்களில் ஆம்புலன்ஸ் கூட உடனடியாக கிடைக்காததால் உயிர்பலி ஏற்படுகிறது. கர்ப்பிணிகள் குறித்த நேரத்தில் சிகிச்சை பெற முடியாமல் பிரசவத்தில் சிக்கல் ஏற்படுகின்றன. 30 க்கும் மேற்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர், செவிலியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
ஒரு சுகாதார நிலையத்தில் ஒரு டாக்டர், ஒரு நர்ஸ், ஒரு மருந்தாளுனர், ஒரு உதவியாளர் இருக்க வேண்டும். நோயாளிகள் காய்ச்சல், தலைவலிக்கு சிகிச்சைக்கு செல்லும் போது டாக்டரே சிகிச்சை அளித்து மருந்து, மாத்திரைகள் வழங்க வேண்டிய சூழ்நிலை இருந்து வருகிறது. ஒரு சில இடங்களில் மருந்தாளுநர் கிடையாது.
கூடுதல் பணிச்சுமை ஏற்பட்டு அங்கு பணியாற்றுபவர்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். ஒரு சில ஆரம்ப சுகாதார நிலையங்களில் உபகரணங்கள் இருந்தும் அதற்கான பணியாளர் இல்லாமல் செயல்பாடின்றி வீணாகி வருகிறது. இதை கருத்தில் கொண்டு காலி பணியிடங்களை நிரப்ப வேண்டிய கட்டாயம் இருந்து வருகிறது.
அது மட்டுமல்ல உள்கட்டமைப்பு வசதிகள், உபகரணங்கள் இல்லாதது பெரும் குறையாக இருந்து வருகிறது. உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, காலி பணியிடங்களை நிரப்புவதுடன், உபகரணங்களை வழங்கி பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான சிகிச்சை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.