/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
காரியாபட்டி அரசு மருத்துவமனையில் டாக்டர்கள், பணியாளர்கள் பற்றாக்குறை
/
காரியாபட்டி அரசு மருத்துவமனையில் டாக்டர்கள், பணியாளர்கள் பற்றாக்குறை
காரியாபட்டி அரசு மருத்துவமனையில் டாக்டர்கள், பணியாளர்கள் பற்றாக்குறை
காரியாபட்டி அரசு மருத்துவமனையில் டாக்டர்கள், பணியாளர்கள் பற்றாக்குறை
ADDED : அக் 26, 2024 04:45 AM
காரியாபட்டி: காரியாபட்டி அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் நீண்ட வரிசையில் கால் கடுக்க நிற்க வேண்டிய சூழ்நிலையில் தவியாய் தவிக்கின்றனர்.
காரியாபட்டியை சுற்றியுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் காய்ச்சல், தலைவலி உள்ளிட்ட நோய்களுக்கு காரியாபட்டி அரசு மருத்துவமனைக்கு வருகின்றனர்.
கர்ப்பிணி பெண்கள், விபத்தில் சிக்குபவர்கள் என பலருக்கும் இங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
50 க்கும் மேற்பட்ட படுக்கை வசதிகள், எக்ஸ்ரே உள்ளிட்ட கருவிகள் உள்ளன. 5 டாக்டர்கள் இருக்க வேண்டும். 3 டாக்டர்கள் பணியில் உள்ளனர். அதிலும் சிலர் தொடர் விடுப்பு, அவசர விடுமுறையில் செல்கின்றனர்.
சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து தினமும் 600-க்கும் மேற்பட்ட வெளிநோயாளிகள் வந்து செல்கின்றனர். டாக்டர்கள் பற்றாக்குறையால் பரிசோதிக்க நேரமாவதால், நீண்ட நேரம் கால் கடுக்க நிற்க வேண்டிய சூழ்நிலையில் நோயாளிகள் தவியாய் தவிக்கின்றனர்.
விபத்து உள்ளிட்ட பிரச்னைகளுக்கு முதலுதவி செய்ய டாக்டர் செல்ல வேண்டிய நிலையில், வெளி நோயாளிகளை பரிசோதிப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது. தற்போது பருவ மழை பெய்து வருவதால் காய்ச்சல், இருமல், சளி உள்ளிட்ட பிரச்னைகளால் பாதிக்கப்பட்டு, கூடுதல் நோயாளிகள் வருகின்றனர். லேப் டெக்னீசியன், எக்ஸ்ரே உதவியாளர் என ஏராளமான காலியிடங்கள் உள்ளன.
மருத்துவமனையில் வசதிகள் இருந்தும் ஆட்கள் பற்றாக்குறையால் இப்பகுதி நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை எடுக்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.
இதனை கருத்தில் கொண்டு கூடுதல் டாக்டர்களை நியமித்து, தேவையான பணியாளர்களை பணியமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என நோயாளிகள் எதிர்பார்க்கின்றனர்.