/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஸ்ரீவி., நகராட்சி வரி வசூலில் ஹீரோ; சுகாதார பணியில் ஜீரோ
/
ஸ்ரீவி., நகராட்சி வரி வசூலில் ஹீரோ; சுகாதார பணியில் ஜீரோ
ஸ்ரீவி., நகராட்சி வரி வசூலில் ஹீரோ; சுகாதார பணியில் ஜீரோ
ஸ்ரீவி., நகராட்சி வரி வசூலில் ஹீரோ; சுகாதார பணியில் ஜீரோ
ADDED : பிப் 13, 2024 05:10 AM
ஸ்ரீவில்லிபுத்தூர : ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி அதிகாரிகள் வரி வசூலில் காட்டுகின்ற தீவிரத்தை, தினசரி செய்ய வேண்டிய தூய்மை பணியிலும் செய்யாமல் ஜீரோவாக உள்ளதால் மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி 33 வார்டுகளிலும் தினசரி தூய்மை பணி என்பது சரிவர நடப்பதில்லை. இதனால் நகரின் ஒவ்வொரு தெருவிலும் குப்பை, கழிவுகள் சேர்ந்து சுகாதாரக் கேட்டை ஏற்படுத்தி வருகிறது.
வீடுகளில் குப்பை வாங்கும் நகராட்சி தூய்மை பணியாளர்கள் வாறுகாலில் அடைபட்டுள்ள கழிவுகளை தினசரி அப்புறப்படுத்தாததால் ஆங்காங்கே தேங்கி வழிகிறது. நகராட்சி கமிஷனரோ, சுகாதார பிரிவு அதிகாரிகளோ களப்பணிக்கு வருவதில்லை. அலைபேசி வழியாக புகார் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற பதில் தான் வருகிறது தவிர குறைகள் சரி செய்யப்படாத நிலையே காணப்படுகிறது. இவ்வாறு சுகாதார பணியில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி அதிகாரிகள் செயல்பாடு ஜீரோவாகவே உள்ளது.
அதே நேரம் 100 சதவீத வரி வசூல் செய்து அரசின் விருது மற்றும் பணப்பலன்களை பெறுவதற்காக நகராட்சி வரி வசூல் துறை அலுவலர்கள், தனியார் பைனான்ஸ் ஊழியர்கள் போல் காலை 8:00 மணிக்குள்ளே தெருக்களில் வசூலுக்கு வந்து விடுகின்றனர். இதில் ஒரு சில இடங்களில் நகராட்சி கமிஷனரே நேரடியாக வரி வசூலில் ஈடுபடுவதையும் பார்க்க முடிகிறது. இதனால் தற்போது 78% வரி வசூல் செய்து மாநிலத்தில் 10வது இடத்தில் உள்ளது. மீதி வரியையும் வசூல் செய்து மாநிலத்தில் முதலிடம் பெற நகராட்சி அலுவலர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில் 2023- - 24 ஆம் நிதி ஆண்டு முடியும் தருவாயில் உள்ளதால் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீர் வரி, வாடகை, தொழில்வரி, தொழில் உரிமை கட்டணங்கள் ஆகியவற்றை பிப். 28க்குள் நிலுவையின்றி செலுத்த வேண்டுமென நகராட்சி அறிவுறுத்தியுள்ளது.
இவ்வாறு நகராட்சி அதிகாரிகள் வரி வசூலில் தீவிரம் காட்டுவது போல், தினசரி தூய்மை பணியிலும் அக்கறையுடன் செயல்பட வேண்டும் என ஸ்ரீவில்லிபுத்தூர் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.