
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: சத்திரரெட்டியபட்டி ஊராட்சியில் நுாறு நாள் வேலை திட்டத்தின் பணித்தள பொறுப்பாளராக ஞானபவானி என்பவரை கிராம மக்கள் தேர்வு செய்தனர்.
தேர்வு செய்த பொறுப்பாளரை நியமிக்க பி.டி.ஓ., தாமதித்து வருவதாக கூறி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். பணி வழங்கப்படும் என உறுதி அளித்த பின் பெண்கள் கலைந்து சென்றனர்.

