/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
செயல்படாத சிக்னல்கள்; ரோட்டோரத்தில் கனரக வாகனங்கள் கடுப்பில் காரனேசன் பகுதி

ADDED : டிச 17, 2024 03:28 AM

சிவகாசி: டிராபிக் சிக்னல் செயல்படவில்லை, ரோட்டோரத்தில் நிறுத்தப்படும் கனரக வாகனங்கள் என சிவகாசி காரனேசன் விலக்கு, சிறுகுளம் கண்மாய் கரை பகுதி மக்கள் எண்ணற்ற பிரச்னைகளில் சிக்கித் தவிக்கின்றனர்.
சிவகாசி காரனேசன் விலக்கு , சிறுகுளம் கண்மாய்க்கரை ரோடு பகுதியில் டிராபிக் சிக்னல்கள் செயல்படாதது, ரோட்டில் நிறுத்தப்படும் கனரக வாகனங்கள் முக்கிய பிரச்னையாக உள்ளது. இப்பகுதியில் உள்ள சிறுகுளம் கண்மாயில் கழிவு நீர் கலக்கிறது. கரையில் நடைபாதை அமைக்கப்பட்டும் கரை முழுவதும் முட் புதர்கள் ஆக்கிரமித்துள்ளது. தவிர குப்பைகளும் கொட்டப்பட்டு சுகாதாரக் கேடு ஏற்படுகின்றது.
கண்மாய் கரையில் அமைக்கப்பட்டுள்ள பெரும்பான்மையான மின்கம்பங்கள் சேதம் அடைந்துள்ளது. காரனேசன் விலக்கிலிருந்து திருத்தங்கல் செல்லும் ரோட்டில் இருபுறமும் மழை நீர் தேங்கி வாகன ஓட்டிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது. தனியார் நிறுவனங்களின் முன்பு ரோடு வரை நிறுத்தப்படுகின்ற டூவீலர்களாலும் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. ரோட்டில் கொட்டி கிடக்கின்ற மணல்களால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.