நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருச்சுழி : திருச்சுழி அருகே பரளச்சி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யகோரி கையெழுத்து இயக்கம் நடந்தது.
திருச்சுழி அருகே பரளச்சியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் 50 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வந்து செல்வர். இங்கு தேவையான அடிப்படை வசதிகள் இல்லை. கழிப்பறை, குடிநீர், ஜெனரேட்டர், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வசதிகளை செய்யக்கோரியும், ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்த கோரியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக கையெழுத்து இயக்கம் நடந்தது. ஒன்றிய செயலாளர் செல்வம் தலைமை வகித்தார். கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

