/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அக்கா, தங்கை பலாத்காரம் 5 பேர் கும்பலுக்கு வலை
/
அக்கா, தங்கை பலாத்காரம் 5 பேர் கும்பலுக்கு வலை
ADDED : மார் 20, 2024 12:03 AM
அருப்புக்கோட்டை:விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த, 27 வயது பெண், அவரது 25 வயது தங்கையும் அருகே உள்ள பனியன் கம்பெனியில் வேலை செய்கின்றனர். அங்கு சம்பள பணத்தை வாங்க செல்வதற்காக, 27 வயது பெண், அருப்புக்கோட்டை அருகே மற்றொரு கிராமத்தில் வசிக்கும் தன் தங்கை வீட்டிற்கு வந்தார்.
அப்போது, அவர்களுக்கு அறிமுகமான ராஜ்குமார் என்பவர், அந்த பெண்களின் நெருங்கிய உறவினருக்கு ஆபத்து எனக் கூறி, இருவரையும் பைக்கில் ஏற்றிக்கொண்டு காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு இருந்த நான்கு பேர், ராஜ்குமாரை அடிப்பது போல நடித்து விரட்டிவிட்டு, அக்கா, தங்கையை பலாத்காரம் செய்து தப்பினர். போலீசார் ராஜ்குமார் உட்பட, ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்து தேடிவருகின்றனர்.

