ADDED : பிப் 05, 2025 04:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார்: சாத்துார் மேட்டமலை அரசு கலை, அறிவியல் கல்லுாரியில் கவுரவ பேராசிரியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் பணிபுரிந்து வரும் கவுரவ பேராசிரியர்களுக்கு 11 மாதம் வழங்கப்படும் சம்பளத்தை 12 மாதம் உயர்த்தி வழங்க கோரியும், பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தியும் நீதிமன்றம் உத்திரவு படி ரூ.50,000 சம்பளம் வழங்க கோரி கவுரவபேராசிரியர்கள் வகுப்புகளை புறக்கணித்து கல்லுாரியில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வணிகவியல் துறை தலைவர் வெள்ளைச்சாமி தலைமை வகித்தார். 12க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.