/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வேதிப்பொருள் ஆராய்ச்சி மைய கட்டுமான பணி பாதியில் நிற்குதே ஏமாற்றத்தில் சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள்
/
வேதிப்பொருள் ஆராய்ச்சி மைய கட்டுமான பணி பாதியில் நிற்குதே ஏமாற்றத்தில் சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள்
வேதிப்பொருள் ஆராய்ச்சி மைய கட்டுமான பணி பாதியில் நிற்குதே ஏமாற்றத்தில் சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள்
வேதிப்பொருள் ஆராய்ச்சி மைய கட்டுமான பணி பாதியில் நிற்குதே ஏமாற்றத்தில் சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள்
ADDED : ஜன 02, 2026 05:49 AM
சிவகாசி :மகாராஷ்டிர மாநிலம் நாக்பூருக்கு அடுத்தபடியாக விருதுநகர்மாவட்டம் சிவகாசியில் ரூ.15 கோடியில் தொடங்கப்பட்ட வேதிப்பொருள் ஆராய்ச்சி மையக் கட்டுமான பணிகள் கிடப்பில்
போடப்பட்டதால் பட்டாசு உற்பத்தியாளர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி, விருதுநகர், சாத்துார், வெம்பக்கோட்டை பகுதியில் 1080 பட்டாசு ஆலைகள் உள்ளன. 2018ல் பட்டாசு தொடர்பான வழக்கில் பட்டாசு தயாரிப்பில் பேரியம் நைட்ரேட் பயன்படுத்தக் கூடாது, சரவெடி தயாரிக்க கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி இந்திய அறிவியல், தொழில் ஆராய்ச்சி கவுன்சில், தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆய்வு நிறுவனம் (நீரி), மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் பாதுகாப்பு அலுவலகம் (பெசோ) ஆகிய அமைப்பு களால் குறைந்த அளவில் பேரியம் நைட்ரேட் பயன்படுத்தி பசுமை பட்டாசு தயாரிப்பதற்கான விதிகள் உருவாக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் மட்டுமே வேதிப்பொருள் ஆராய்ச்சி மையம் உள்ளதால் மாவட்டத்தில் உள்ள பட்டாசு உற்பத்தி யாளர்கள் வேதிப்பொருள் மாதிரிகளை நாக்பூர் ஆய்வகத்திற்கு அனுப்பி பசுமை பட்டாசு உரிமம் பெற வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதற்காக சிவகாசியில் உள்ள தனியார் கல்லுாரியில் தற்காலிகமாக ஆய்வு மையம் அமைக்கப்பட்டது.
மேலும் 2022ல் மத்திய சுற்றுச்சூழல் வனம், காலநிலை மாற்ற அமைச்சகம், நீரி, பட்டாசு உரிமை யாளர்கள் இடையே பசுமை பட்டாசு தயாரிப்பு குறித்த ஆய்வு மையம் அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத் தானது.
அதன்படி இந்த ஆய்வு மையத்திற்கு மத்திய அரசு ரூ. 9 கோடி, தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்கம் (டான்பாமா) சார்பில் ரூ. 6 கோடி என 15 கோடியில் வேதிப் பொருள் ஆராய்ச்சி மையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
சிவகாசி அருகே ஆனைக்கூட்டத்தில் 5 ஏக்கர் பரப்பளவில் இந்தியாவின் 2வது வேதிப்பொருள் ஆராய்ச்சி மையம் அமைக்க 2023 ஜன.1ல் அடிக்கல் நாட்டப்பட்டது.
இதில் மூலப்பொருட்கள், ரசாயன கலவை, பட்டாசு வெளியிடும் புகை ஆராய்ச்சி, பட்டாசு ஆலையில் பயன்படுத்தப்படும் வேதிப்பொருட்கள் பரிசோதனை செய்யப்பட்டு சான்றிதழ் வழங்குதல், பசுமை பட்டாசு உற்பத்திக் கான பயிற்சி அளித்தல் மற்றும் பட்டாசு தொழிலை பாதுகாப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது.
ஆய்வு மையத்திற்கு தேவையான உபகரணங்கள் கொள்முதல் செய்யப்பட்டு விட்டதாகவும் 2023 ஏப்.ல் ஆராய்ச்சி மையம் செயல்பாட்டிற்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆராய்ச்சி மையத்திற்கான அடித்தளம் அமைக்கப்பட்டு பணிகள் வேகமாக நடந்த நிலையில் அடுத்த சில மாதங்களில் பணிகள் கிடப்பில் போடப்பட்டது.
கட்டுமான பணிகள் துவங்கப்பட்ட இரு ஆண்டுகள் ஆகிய நிலையில் அப்பகுதி முழுவதும் புதர் மண்டிவிட்டது. சிவகாசியில் வேதிப்பொருள் ஆராய்ச்சி மையம் செயல்பாட்டிற்கு வந்தால் பசுமை பட்டாசு உற்பத்தி மட்டுமின்றி வேதிப்பொருள் சார்ந்த பிற தொழில்கள் தொடங்கலாம் என எதிர்பார்த்திருந்த பட்டாசு உற்பத்தியாளர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

