/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நான்கு வழிச்சாலையில் புதர் மண்டி கிடந்த புற்கள் வெட்டும் பணி தீவிரம்
/
நான்கு வழிச்சாலையில் புதர் மண்டி கிடந்த புற்கள் வெட்டும் பணி தீவிரம்
நான்கு வழிச்சாலையில் புதர் மண்டி கிடந்த புற்கள் வெட்டும் பணி தீவிரம்
நான்கு வழிச்சாலையில் புதர் மண்டி கிடந்த புற்கள் வெட்டும் பணி தீவிரம்
ADDED : ஜன 02, 2026 05:48 AM
காரியாபட்டி: மதுரை-துாத்துக்குடி நான்கு வழிச் சாலை டிவைடரில் புதர் மண்டி கிடந்த புற்களை தினமலர் நாளிதழில் செய்தி எதிரொலியால் வெட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
மதுரை- தூத்துக்குடி நான்கு வழிச் சாலை படு மோசமாக இருந்ததால் வாகனங்கள் சென்றுவர முடியவில்லை. அடிப்படை வசதிகள் இல்லாததால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். இதன் காரணமாக, கட்டணம் வசூலிப்பதை நிறுத்த வேண்டி பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இதையடுத்து ரோடு சீரமைக்கும் பணி நடந்தது.
இருபுறங்களிலும் தார் கலவை போடப்பட்டது. வாகனங்கள் சிரமம் இன்றி செல்கின்றன. ஆங்காங்கே வெள்ளை கோடுகள் போடப்பட்டு வருகின்றன. டிவைடர் பக்கவாட்டு சுவர்கள் சற்று உயர்த்தும் பணி நடந்தது.
பெரும்பாலான இடங்களில் அரளிச் செடிகள் காணாமல் போயிருந்தன. அதனை நட்டு வளர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தினர். அதனை கண்டு கொள்ளவில்லை. சில மாதங்களுக்கு முன் பருவமழை பொழிந்ததால் டிவைடரில் அதிகளவில் புற்கள் முளைத்தன.
ஆங்காங்கே இருந்த அரளிச்செடிகளும் மூடி மறைத்து வளர்ச்சி அடையாமல் இருந்தன. அதுமட்டுமல்ல புதர் மண்டிய புற்களுக்குள் நாய், ஆடு, மாடுகள் மறைந்திருந்து திடீரென ரோட்டுக்கு பாயும் ஆபத்தான சூழ்நிலை இருந்தது.
விபத்திற்கு முன் புற்களை அப்புறப்படுத்த வேண்டுமென தினமலர் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக காரியாபட்டி ஆவியூர் பகுதியில் புற்கள் வெட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. தொடர்ந்து அரளிச்செடிகளை வளர்க்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

