/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சிவகாசி பட்டாசு ஆலையில் மின்னல் தாக்கி அறை சேதம்
/
சிவகாசி பட்டாசு ஆலையில் மின்னல் தாக்கி அறை சேதம்
ADDED : அக் 11, 2024 03:04 AM

சிவகாசி:விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் மின்னல் தாக்கியதில் ஒரு அறை சேதம் அடைந்தது. இதில் மூதாட்டி காந்தி அம்மாள் 75, காயமடைந்தார்.
சிவகாசி அருகே கொத்தனேரி வெள்ளூர் ரோட்டில் பட்டாசு ஆலை ஒன்று உள்ளது. நாக்பூர் உரிமம் பெற்ற இப்பட்டாசு ஆலையில் 280 பேர் பணிபுரிந்தனர். நேற்று மாலை 4:30 மணியளவில் அப்பகுதியில் இடி மின்னலுடன் பரவலாக மழை பெய்தது. அப்போது பட்டாசு ஆலையில் ஒரு அறையில் மின்னல் தாக்கியது. இதில் அறை சேதம் அடைந்தது. அறையில் பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டிருந்த ஆமத்துார் குமாரபுரத்தைச் சேர்ந்த காந்தி அம்மாள் காயமடைந்தார். சிவகாசி அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். எம்.புதுப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.