ADDED : ஜூன் 18, 2025 11:25 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி: சிவகாசி சப் கலெக்டர்பிரியா ரவிச்சந்திரன் இடமாற்றப்பட்டு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய இணை மேலாண்மை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை இணை இயக்குநராக பதவி வகித்த பிரியா ரவிச்சந்திரனுக்கு, 2024 ஜன. ல் ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக பதவி உயர்வு வழங்கப்பட்டது. தொடர்ந்து ஜூன் மாதம் சிவகாசி கலெக்டராக நியமிக்கப்பட்டவர், ஓராண்டாக சிவகாசியில் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் நேற்று அவரை தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய இணை மேலாண்மை இயக்குநராக நியமித்து தலைமைச் செயலர் முருகானந்தம் உத்தரவிட்டுள்ளார்.