/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஓய்வு ஆசிரியை, தம்பதிகளை கொலை செய்து நகைகளை கொள்ளையடித்த 6 பேர் கைது தப்ப முயன்றவருக்கு கால் முறிவு
/
ஓய்வு ஆசிரியை, தம்பதிகளை கொலை செய்து நகைகளை கொள்ளையடித்த 6 பேர் கைது தப்ப முயன்றவருக்கு கால் முறிவு
ஓய்வு ஆசிரியை, தம்பதிகளை கொலை செய்து நகைகளை கொள்ளையடித்த 6 பேர் கைது தப்ப முயன்றவருக்கு கால் முறிவு
ஓய்வு ஆசிரியை, தம்பதிகளை கொலை செய்து நகைகளை கொள்ளையடித்த 6 பேர் கைது தப்ப முயன்றவருக்கு கால் முறிவு
ADDED : டிச 01, 2024 02:19 AM

ராஜபாளையம்:விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஓய்வு ஆசிரியை ஜீவரத்தினம் 84, முதிய தம்பதிகளான ராஜகோபால் 78, அவரது மனைவி குருபாக்கியம் 68, ஆகியோரை கொலை செய்து நகைகளை கொள்ளையடித்த வழக்கில் முத்துக்குமார், அவரது மனைவி தேவி உட்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். போலீஸ் விசாரணையில் தப்பி ஓடியபோது கீழே விழுந்ததில் முத்துக்குமாருக்கு கால் முறிவு ஏற்பட்டது.
ராஜபாளையம் திருவள்ளுவர் நகர் ஓய்வு ஆசிரியை ஜீவரத்தினம். கணவர் இல்லை.
மகன், மகள்கள் வேறு ஊர்களில் வசித்து வந்தனர். நவ.23ல் வீட்டில் இவர் இறந்த நிலையில் கிடந்தார். நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்ததால் டி.எஸ்.பி., ப்ரீத்தி தலைமையில் தனிப்படை போலீசார் விசாரித்தனர்.
இதில் ராஜபாளையம் மலையடிப்பட்டியைச் சேர்ந்த ரமேஷ் 30, தென்காசி மாவட்டம் பெருங்கோட்டூரை சேர்ந்த முத்துக்குமார் 35, மதன் 19, ஆகியோர் வந்து சென்றது அப்பகுதி கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது.
அவர்களிடம் விசாரித்ததில் ஜீவரத்தினத்தை கழுத்தை நெரித்து கொலை செய்து நகைகளை கொள்ளை அடித்தது உறுதியானது.
முத்துக்குமாரின் வீட்டில் சோதனையிட்டபோது அவரது வீட்டில் ஏராளமான நகைகள் கிடைத்தன. ஜீவரத்தினத்திடம் பறித்த 30 பவுன் தவிர மேலும் பல பவுன் நகைகள் இருந்தன.
விசாரணையில் 2022-ல் ராஜபாளையம் தெற்கு வைத்தியநாதபுரத்தில் ஓய்வு பெற்ற ஸ்பின்னிங் மில் மேலாளர் ராஜகோபால் 78, அவரது மனைவி குருபாக்கியம் 68, இருவரையும் கொலை செய்து நகைகளை கொள்ளையடித்தது கண்டுபிடிக்கப்பட்டது.
ஜீவரத்தினம் கொலை வழக்கில் முத்துக்குமார் , அவரது மனைவி தேவி 39, ரமேஷ், மதன் ஆகியோரையும், தம்பதி கொலை வழக்கில் சேத்துாரை சேர்ந்த சங்கிலியாண்டி 30, ராஜபாளையம் பூபால்பட்டி தெருவை சேர்ந்த சதீஷ் 32, என ஆறு பேரை போலீசார் கைது செய்தனர்.
இரண்டு வழக்கிலும் சம்பந்தப்பட்ட முத்துக்குமார் போலீஸ் பிடியிலிருந்து தப்பி ஓட முயற்சித்த போது கால் முறிவு ஏற்பட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டது.