ADDED : அக் 25, 2026 08:32 PM
அ நிறம் | அளவு
ராஜபாளையம்: 6–
ராஜபாளையம் அருகே பருத்தி விவசாயிகளுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடந்தது.
வேளாண் துறை சார்பில் நவீன தொழில்நுட்ப உதவிகள் வழங்கி பருத்தி உற்பத்தியை அதிகரிக்கும் விதமாக விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
இத் திட்டத்தின் கீழ் ராஜபாளையம் அருகே கொருக்காம்பட்டியில் பயிற்சி முகாம் நடந்தது. மாவட்ட வேளாண் துணை இயக்குனர் நாச்சியார் அம்மாள் தலைமை வகித்தார். பருத்தி ஆராய்ச்சி நிலைய தலைவர் ஜோதிமணி பருத்தியில் ஊட்டச்சத்து மேலாண்மை குறித்து பயிற்சி அளித்தார்.
திட்டம் குறித்து வேளாண் உதவி இயக்குனர் தனலட்சுமி விளக்கினார்.
இதில் வேளாண் அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.
