/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கிணற்றில் தவறி விழுந்த மாணவர் பலி
/
கிணற்றில் தவறி விழுந்த மாணவர் பலி
ADDED : ஜூலை 24, 2011 09:32 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர் : விருதுநகர் அருகேயுள்ள பெரிய பேராலியை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி மகன் சதீஸ்குமார்(15).
இதே ஊரை சேர்ந்த உக்கிரபாண்டி மகன் முனியசாமி(15). இருவரும் விருதுநகரில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகின்றனர். ஊருக்குள் உள்ள கிணற்றில் குளிக்க சென்றனர். இதில் தவறி விழுந்த சதீஸ் குமார் பலியானார். முனியசாமி மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட்டார். பாண்டியன் நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.