/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வழுக்கும் மண்ரோடு, வாறுகாலின்றி சுகாதாரக் கேடு ஸ்ரீவில்லிபுத்துார் முல்லை நகர் மக்கள் அவதி
/
வழுக்கும் மண்ரோடு, வாறுகாலின்றி சுகாதாரக் கேடு ஸ்ரீவில்லிபுத்துார் முல்லை நகர் மக்கள் அவதி
வழுக்கும் மண்ரோடு, வாறுகாலின்றி சுகாதாரக் கேடு ஸ்ரீவில்லிபுத்துார் முல்லை நகர் மக்கள் அவதி
வழுக்கும் மண்ரோடு, வாறுகாலின்றி சுகாதாரக் கேடு ஸ்ரீவில்லிபுத்துார் முல்லை நகர் மக்கள் அவதி
ADDED : அக் 29, 2025 07:43 AM
ஸ்ரீவில்லிபுத்துார்: குடியிருப்புகள் உருவாகி பல ஆண்டுகள் ஆன நிலையில் முறையான ரோடு, வாறுகால் வசதி இல்லாமல் சிரமம், சுகாதாரக் கேடு, விஷ பூச்சிகள் நடமாட்டம், அடிக்கடி குழாய் உடைந்து வீணாகும் குடிநீர் என பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் ஸ்ரீவில்லிபுத்துார் முல்லை நகர் மக்கள் வசித்து வருகின்றனர்.
இப்பகுதி குடியிருப்போர் சங்க தலைவர் புளுகாண்டி, செயலாளர் சந்திரசேகர், உறுப்பினர்கள் பாண்டியன், கணேசன், மாரியம்மாள், உமா ஆகியோர் கூறியதாவது;
ஸ்ரீவில்லிபுத்துார் நகராட்சியின் 33 வது வார்டின் ஒரு பகுதியும், ஊராட்சி ஒன்றியத்தின் ஒரு பகுதியாகவும் உள்ள முல்லை நகரில் ஆண்டு தோறும் புதிய குடியிருப்புகள் உருவாகி வருகிறது.
சிவகாசி மெயின் ரோட்டில் இருந்து ரயில்வே ஸ்டேஷன் செல்லும் ரோடு மட்டுமே தார் ரோடு ஆக உள்ளது. அதே நேரம் குடியிருப்பின் பல்வேறு தெருக்களில் வீடுகள் உருவாகி பல ஆண்டுகள் ஆன நிலையில் ஒரு சில தெருக்களை தவிர பெரும்பாலான தெருக்களில் முறையான ரோடு, வாறுகால் வசதி இல்லை.
மண்ரோடாக இருப்பதால் மழை நேரங்களில் சகதி ஏற்பட்டு நடந்து செல்லும் போது வழுக்கிவிழும் அபாயம் காணப்படுகிறது. வாறுகால் வசதி இல்லாததால் வீட்டு கழிவு தண்ணீர் ஆங்காங்கே தேங்கி சுகாதார கேட்டை ஏற்படுத்துகிறது.
விஷ பூச்சிகள் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
அனைத்து தெருக்களிலும் மின்கம்பங்கள் இருந்த போதிலும் அங்கு போதிய தெரு விளக்குகள் இல்லாமல் இரவு நேரங்களில் இருண்டு காணப்படுகிறது. இதனால் இப்பகுதியில் அடிக்கடி திருட்டுகள் நடந்து வருகிறது.
ஆண்டு தோறும் குடியிருப்புகள் அதிகரித்து வரும் நிலையில் ரோடு வசதி செய்து தரக்கோரி நகராட்சி நிர்வாகத்திடம் மனு அளித்த நிலையில் ஒரு சில தெருக்களில் மட்டும் தார் ரோடு போடப்பட்டுள்ளது.
ஊராட்சி ஒன்றிய பகுதிக்கு உட்பட்ட தெருக்களில் தற்போது ஜல்லிகற்கள் மட்டுமே விரிக்கப்பட்டுள்ளது. இன்னும் முழுமையாக தார்ரோடு போடப்படவில்லை.
எனவே, முல்லை நகரில் அனைத்து தெருக்களிலும் வாறுகாலுடன் கூடிய ரோடு வசதிகள், அனைத்து மின்கம்பங்களிலும் தெருவிளக்குகள் அமைத்தல், அடிக்கடி குழாய் உடைந்து தண்ணீர் வீணாகும் நிலையை சரி செய்தல் உட்பட அனைத்து வசதிகளும் செய்து தர நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,என்றனர்.

