/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மந்தமான ரோடு பணி, திறந்த வெளி பாராக பூங்கா
/
மந்தமான ரோடு பணி, திறந்த வெளி பாராக பூங்கா
ADDED : பிப் 15, 2024 04:42 AM
ராஜபாளையம்: ராஜபாளையம் நகராட்சி 22 வது வார்டில் தெருவோர ஆக்கிரமிப்புகள், செயல்படாத குடிநீர் தொட்டி, குடிமகன்கள் தொல்லை என பல்வேறு குறைபாடுகளுடன் அப்பகுதி மக்கள் வசித்து வருகின்றனர்.
பூபால் பட்டி தெருவின் ஒரு பகுதி, செங்குந்த முதலியார் தெரு, முத்து கொத்தனார் தெரு, அங்கைய ராஜா தெரு, வளைய செட்டி தெரு ஆகிய பகுதிகளை கொண்டது இந்த வார்டு. நகரின் நடுவே அமைந்துள்ள இப்பகுதி வணிக நிறுவனங்கள் அதிகம் உள்ளதால் கடைகள் முன் ஆக்கிரமிப்பு, தெருக்களில் வீடுகளின் தாழ்வாரங்கள் ரோடு வரை நீள்வது என தெருக்கள் சுருங்கி உள்ளது.
பி.எஸ்.கே பார்க் தெருவில் 2 குடிநீர் தொட்டி, துார் வாராத கிணறு, செங்குந்த முதலியார் தெருவில் 2 குடிநீர் தொட்டிகள் என செயல்படாமல் உள்ளது. தென்காசி தேசிய நெடுஞ்சாலை, அம்பலப்புளி பஜார் என இரண்டு பக்கம் உள்ள டாஸ்மாக் கடையிலிருந்து வெளியேறும் குடிமகன்களால் தொடர் பிரச்சனை ஏற்பட்டு வருகிறது.
விடுபட்ட இடங்களில் ஆமை வேக ரோடு பணிகள் மக்களின் போக்குவரத்தை பாதிக்கிறது. சாக்கடை அடைப்பு கொசு தொல்லை போன்ற சிக்கலை சந்திக்கின்றனர்.
தீர்வு காணப்படும்
ரோஹிணி, கவுன்சிலர்:
விடுபட்ட இடங்களில் சாலை பணிக்கு ஒப்பந்ததாரர்களிடம் கூறி விரைவுபடுத்தப்படும். குடிநீர் குழாய் சரி செய்வதற்கு அப்பகுதியின் ஒரு சாரார் தடை விதிக்கின்றனர். தாமிரபரணி குழாய் இணைப்பு தொடங்கினால் குடிநீர் தொட்டி இடைஞ்சல் ஏற்படும் என்கின்றனர். பி. எஸ். கே பார்க் சுவரை உயர்த்த கேட்டுள்ளோம். குறைபாடுகள் சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

