/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சொத்துவரி உயர்வுக்கு எதிரான தீர்மானங்கள் நிறைவேற்றியும் மெத்தனம்; மக்கள் எதிர்ப்பால் செய்வதறியாது புலம்பும் கவுன்சிலர்கள்
/
சொத்துவரி உயர்வுக்கு எதிரான தீர்மானங்கள் நிறைவேற்றியும் மெத்தனம்; மக்கள் எதிர்ப்பால் செய்வதறியாது புலம்பும் கவுன்சிலர்கள்
சொத்துவரி உயர்வுக்கு எதிரான தீர்மானங்கள் நிறைவேற்றியும் மெத்தனம்; மக்கள் எதிர்ப்பால் செய்வதறியாது புலம்பும் கவுன்சிலர்கள்
சொத்துவரி உயர்வுக்கு எதிரான தீர்மானங்கள் நிறைவேற்றியும் மெத்தனம்; மக்கள் எதிர்ப்பால் செய்வதறியாது புலம்பும் கவுன்சிலர்கள்
ADDED : மார் 07, 2025 06:16 AM

விருதுநகர்: சொத்துவரி உயர்வால் ஏழைகள் பாதிக்கப்படும் சூழலில் மாவட்டத்தில் உள்ள நகராட்சி கூட்டங்களில் எதிர்ப்பு தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டும், தற்போது வரை ஆணையரகம் அதை கண்டு கொள்ளாமல் இருந்து வருகிறது என கவுன்சிலர்கள் புலம்புகின்றனர்.
தமிழகம் முழுவதும்2022--23ம் ஆண்டு சொத்து வரி உயர்த்தப்பட்டது. இந்நிலையில் நகராட்சி நிர்வாக இயக்குநர் அனைத்து நகராட்சி கமிஷனர்களுக்கும் 2024 ஜூலை 20ல் அனுப்பிய சுற்றறிக்கையில், மாநகராட்சி, நகராட்சிகள் மூலம் வழங்கப்படும் குடிநீர் வழங்கல், திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்ட பணிகளை செய்வதில் 15வது நிதி ஆணைய மானியம் முக்கியத்துவம் பெறுவதால் துாய்மை இந்தியா, அம்ரூட்ஆகிய திட்டங்களுக்கு மத்திய அரசின் மானிய நிதி பெற சொத்துவரி வசூலில் உயர்வு செய்து வசூலிப்பது அவசியம் என்றும், ரூ.100க்கு குறைவான சொத்து வரி தொகை உள்ள இடங்களை கண்டறிந்து உயர்த்த வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
இதன்படி ரூ.76 வசூலித்த இடத்தில் ரூ.ஆயிரத்திற்கு மேல் என 'ஷாக்' ஏற்படுத்தும் வகையில் சொத்து வரி உயர்ந்துஉள்ளது. அதே போல் வணிக வரி கட்டடங்களின் சொத்து வரியை இரு மடங்காக்கி வசூலிக்கின்றனர்.
கதவு எண் மூலம் ஜி.எஸ்.டி., வரி செலுத்துவோரை ஆய்வு செய்து அவர்களின் வரியையும் உயர்த்தி வருகின்றனர். இதனால் மக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இதனால் நகராட்சிகளில் வரி சீரமைப்பு கூட்டம் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.அதற்கும் அரசு செவி சாய்க்காமல் உள்ளது.
இந்நிலையில் நகராட்சிகளில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டும் கண்டுகொள்ளப்பட வில்லை. மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்துார், விருதுநகர் நகராட்சிகளில் சொத்துவரி உயர்வை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழகத்தின் பல நகராட்சிகளிலும் இது போல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதையும் நகராட்சி நிர்வாக ஆணையரகம் கண்டுகொள்ளாமல் உள்ளது. அந்தந்த பகுதி நகராட்சி கவுன்சிலர்கள் மாவட்ட அமைச்சர்களிடம் கூறினாலும், கண்டும் காணாது இருக்கின்றனர். வரி சீரமைப்பு கூட்டமும் நடத்தவில்லை.
சொத்து வரி உயர்த்தும்முன் தீர்மானமும் போடவில்லை. இதனால் தி.மு.க., கவுன்சிலர்களே வரும் தேர்தலில் மக்களிடம் ஓட்டு கேட்க போக முடியுமா என்ற கேள்வியுடன் உள்ளனர்.