ADDED : அக் 08, 2024 04:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர் : விருதுநகரில் வேளாண் துறையின் மூலம் உணவு, ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்டத்தின் கீழ் சிறுதானியங்களில் சாகுபடியை அதிகரித்தல், உணவு உட்கொள்வதை அதிகரித்தல், சிறுதானிய பயிர்களுக்கான அரசின் திட்டங்கள், மானியங்கள் உள்ளிட்டவை குறித்து, விவசாயிகள், மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பிரசார வாகனங்களை கலெக்டர் ஜெயசீலன் கொடியசைத்து துவங்கி வைத்தார்.
வாகனங்கள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று, துண்டு பிரசுரங்கள் மூலமும் விழிப்புணர்வு ஏற்படுத்தவுள்ளது. வேளாண் இணை இயக்குநர் விஜயா, நேர்முக உதவியாளர் நாச்சியார் அம்மாள், விவசாயிகள், மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

