/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
எஸ்.எம்.ஜே., வர்ணம் ஜூவல்லரி கண்காட்சி
/
எஸ்.எம்.ஜே., வர்ணம் ஜூவல்லரி கண்காட்சி
ADDED : ஜூலை 06, 2025 03:29 AM

சிவகாசி: சிவகாசி பெல் ஓட்டலில் மதுரை செந்தில் முருகன் ஜூவல்லரியின் எஸ்.எம்.ஜே., வர்ணம் ஜூவல்லரி கண்காட்சி நடந்தது. சிவகாசி காளீஸ்வரி பயர் ஒர்க்ஸ் உரிமையாளர் செல்வராஜன் ,அசோகன் எம்.எல்.ஏ., தி.மு.க., மாநில வர்த்தக அணி நிர்வாகி வனராஜா, தொழிலதிபர் கணேசன் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர்.
நிர்வாகிகள் கூறுகையில், நேற்று துவங்கிய கண்காட்சி இன்று காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை நடக்கிறது. கண்காட்சியில் காலத்தால் அழியாத நேர்த்தியையும் ஒப்பற்ற கலைத் திறனையும் கொண்ட பிரத்யோக தங்க நகைகள் வைக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் தங்களுக்கு பிடித்த நகைகளை தேர்வு செய்யலாம், என்றனர். ஏற்பாடுகளை எஸ்.எம்.ஜே., ஜூவல்லரி நிர்வாகிகள் செய்தனர்.