ADDED : மார் 08, 2024 12:22 PM
அ நிறம் | அளவு
விருதுநகர்: விருதுநகர் வே.வ.வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லுாரியின் கல்லுாரி பேரவையும், விருதுநகர் மாவட்ட போலீஸ் இணைந்து சமூக நீதி, மனிதநேய விழிப்புணர்வு நிகழ்ச்சி கல்லுாரி செயலர் கோவிந்தராஜப்பெருமாள் தலைமையில் நடந்தது.
விருதுநகர் எஸ்.பி., பெரோஸ் கான் அப்துல்லா சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார். முன்னதாக விலங்கியல் துறை இணைப் பேராசிரியர் ராணி வரவேற்றார். விருதுநகர் மாவட்ட சமூக நீதி, மனித உரிமைகள் பிரிவு, மாவட்ட குற்றப்பதிவேடு டி.எஸ்.பி., ராஜமணி, விருதுநகர் டி.எஸ்.பி., பவித்ரா, கல்லுாரி உப தலைவர் சிவபாலஈஸ்வரி சந்தோஷ்குமார், உள்பட பலர் பங்கேற்றனர்.
