UPDATED : அக் 14, 2026 12:05 AM
ADDED : அக் 14, 2026 12:02 AM
விருதுநகர்: மின் செயற்பொறியாளர் முரளிதரன் செய்திக்குறிப்பு: பிரதமரின் சூரிய வீடு இலவச மின்சார திட்டத்தில் ஒரு கிலோ வாட் சூரிய மின் திறன் உற்பத்திக்கு மானியமாக ரூ.35 ஆயிரம், 2 கிலோ வாட் சூரிய மின் திறன் உற்பத்திக்கு மானியமாக ரூ.70 ஆயிரம், 3 கிலோ வாட் முதல் 10 கிலோ வாட் வரை ரூ.1 லட்சம் மத்திய மாநில அரசுகளால் மானியமாக வழங்கப்பட்டு வருகிறது.
2027 மார்ச் 31 வரை பதிவு செய்யப்பட உள்ள விண்ணப்பங்களுக்கு மத்திய, மாநில அரசு மானியம் வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தில் பணிகள் நிறைவேற்றிய பின் 7 நாட்களில் இருந்து 30 நாட்களுக்குள் நுகர்வோரின் வங்கி கணக்கில் மானியம் நேரடியாக செலுத்தப்படும்.
இத்திட்டம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விருதுநகர் அம்பாள் திருமண மண்டபத்தில் அக். 16ல் சிறப்பு முகாம் நடக்கிறது. திட்டத்தில் பங்கேற்பவர்களுக்கு முகாமிலேயே பெயர் பதிவு செய்யப்படும், என்றார்.
