/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை -- அணைக்கும் பணியில் வீரர்கள்
/
சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை -- அணைக்கும் பணியில் வீரர்கள்
சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை -- அணைக்கும் பணியில் வீரர்கள்
சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை -- அணைக்கும் பணியில் வீரர்கள்
ADDED : செப் 25, 2024 08:27 PM

ராஜபாளையம்:விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகரின் நடுவே அமைந்துள்ள சஞ்சீவி மலையில் பற்றி எரியும் காட்டுத் தீயை அணைக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.
ராஜபாளையம் கிழக்குப் பகுதி ரயில்வே தண்டவாளத்தை அடுத்து சஞ்சீவி மலை அமைந்துள்ளது. இதையொட்டி வடக்கு மலையடிப்பட்டி, குலாலர் தெரு, பிள்ளையார் கோவில் தெரு, காமராஜபுரம், எம்.ஜி.ஆர்., நகர் அண்ணா நகர் பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் வசிக்கின்றனர்.
இந்நிலையில், மலையின் வடக்கு பகுதி உச்சியில், நேற்று முன் தினம் காலை திடீரென தீப்பற்றியது. அதிவேக காற்றால் ஒரு பகுதியில் பற்றிய தீ பல்வேறு பகுதிகளுக்கும் பரவியதில் மூலிகைகள் உள்ளிட்ட பசுமையான மரங்கள் தீக்கிரையாகின.
வனத்துறையினர் பல்வேறு குழுக்களாக பிரிந்து தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் பணியில் தொய்வு ஏற்பட்டது. மலையடிவாரம் பகுதியையொட்டிய குடியிருப்புகளிலும் பற்றிய தீயை தடுக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.

