/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ராஜபாளையத்தில் குடிநீர் வீணாவதற்கு தீர்வு
/
ராஜபாளையத்தில் குடிநீர் வீணாவதற்கு தீர்வு
ADDED : செப் 20, 2025 11:22 PM
ராஜபாளையம்: 'தினமலர்' நாளிதழ் செய்தி எதிரொலியால் ராஜபாளையம் - தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் பல மாதங்களாக சப்ளையின் போது குடிநீர் வீணானது சரி செய்யப்பட்டது.
ராஜபாளையில் தேசிய நெடுஞ்சாலையில் தாமிரபரணி குடிநீர் குழாய் பதிக்கப்பட்டு சப்ளை நடந்து வந்தது. ஒவ்வொரு முறையும் தண்ணீர் சப்ளை திறப்பின் போது குடிநீர் வீணாகி ரோட்டில் வீணாகி வழிந்து ஓடியது.
தேசிய நெடுஞ்சாலையை தோண்டி பழுது பார்ப்பதற்கு அனுமதி கிடைக்காதது உள்ளிட்ட சிக்கல் இருந்து வந்தது.
மாதக்கணக்கில் தொடர்ந்த இப் பிரச்னை குறித்து 'தினமலர்' நாளிதழில் இரண்டு நாட்களுக்கு முன் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது.
இந்நிலையில் செய்தி எதிரொலியாக நெடுஞ்சாலை தோண்ட அனுமதி வழங்கி குடிநீர் வாரியத்தினர் குழாயில் உடைப்பினை சரி செய்யும் பணிகளை தொடங்கியுள்ளனர்.
நீண்ட காலம் பிரச்னைக்கு தீர்வு ஏற்பட்டுள்ளதால் இப்பகுதியினர் தினமலர் நாளிதழுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.