ADDED : ஜூலை 06, 2025 02:44 AM
வத்திராயிருப்பு:விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பில் செலவிற்கு பணம் தராத தந்தை பாலகிருஷ்ண மூர்த்தியை 55, அரிவாளால் வெட்டிகொன்ற மகன் பாலசுந்தரத்தை 25, போலீசார் கைது செய்தனர்.
வத்திராயிருப்பு மறவர் வடக்கு தெருவை சேர்ந்த கட்டட தொழிலாளி பாலகிருஷ்ண மூர்த்தி. இவரது மனைவி புஷ்பவல்லி 50. இத்தம்பதியின் மகன் பாலசுந்தரம். ஐ.டி.ஐ. படித்துவிட்டு வேலை தேடி வந்தார்.
இந்நிலையில் தம்பதி இடையே ஏற்பட்ட சண்டையில் கடந்த 20 நாட்களாக புஷ்பவல்லி சுரைக்காய் பட்டியில் உள்ள அவரது தாயார் வீட்டில் வசித்து வந்தார். பாலசுந்தரம் தந்தை பாலகிருஷ்ண மூர்த்தியுடன் வசித்து வந்தார்.
இதனிடையே வீட்டில் நேற்று முன்தினம் இரவு செலவுக்கு பணம் கேட்டு தந்தையிடம் பாலசுந்தரம் தகராறு செய்த நிலையில் அவரை அரிவாளால் வெட்டிக்கொலை செய்தார். சம்பவ இடத்தை டி.எஸ்.பி. ராஜா பார்வையிட்டார்.
வத்திராயிருப்பு போலீசார் பாலசுந்தரத்தை கைது செய்தனர்.