/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தாய் இறந்த 10 நாளில் மகன் தற்கொலை
/
தாய் இறந்த 10 நாளில் மகன் தற்கொலை
ADDED : பிப் 01, 2024 06:43 AM

விருதுநகர் : விருதுநகர் பாண்டியன் நகரைச் சேர்ந்தவர் சங்கர் 44. இவர் அதே பகுதியில் காய்கறி கடை நடத்தி வருகிறார். மேலும் அதே பகுதியில் ஆதிபராசக்தி கோயிலின் நிர்வாகியாகவும் உள்ளார்.
இவரின் தாய் ஜோதி 60, சீட்டு நடத்தி நஷ்டம் ஏற்பட்டு கடன் பிரச்னையால் ஜன. 20 மாலை 6:45 மணிக்கு விருதுநகர் ரயில்வே ஸ்டேஷனில் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயில் முன் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில் தாயிடம் பணத்தை கொடுத்தவர்கள் சங்கரிடம் தொடர்ந்து கேட்டு வந்துள்ளனர். அவர்களுக்கு பணத்தை கொடுக்க முடியாததால் ஏற்பட்ட மன உளைச்சலில் நேற்று மதியம் 2:00 மணிக்கு ஆதிபராசக்தி கோயில் பின்புறம் உள்ள பொருட்கள் வைக்கும் பகுதியில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஊரகப்போலீசார் விசாரிக்கின்றனர்.