/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தாயின் உடலை தானமாக வழங்கிய மகன்கள்
/
தாயின் உடலை தானமாக வழங்கிய மகன்கள்
ADDED : மார் 20, 2024 12:12 AM

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் சாத்துாரில் வயது முதிர்வால் இறந்த சுப்புத்தாய் 88, உடலை விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரிக்கு தானமாக மகன்கள் மாரிமுத்து, சமய கருப்பசாமி வழங்கினர்.
சாத்துார் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுப்புத்தாய். இவருக்கு வயது முதிர்வு காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு சாத்துார் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மார்ச் 16 காலை 6:15 மணிக்கு இறந்தார்.
இறந்த தாயின் உடலை தானமாக வழங்க வேண்டும் என விருதுநகர் சிப்காட் இளநிலை பொறியாளர் மாரிமுத்து, தனியார் பேப்பர் மில் எலக்ட்ரீக்கல் பொறியாளர் சமயகருப்பசாமி ஆகிய இருமகன்களும் முடிவு செய்தனர்.
அதன் பின் சுப்புத்தாய்க்கு செய்ய வேண்டிய இறுதி சடங்குகளை முறைப்படி செய்து விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரியில் பயிலும் மாணவர்களின் கல்வி, ஆராய்ச்சி பயன்பாட்டிற்காக தானமாக வழங்கினர். இவர்களின் செயலை பாராட்டி டீன் சீதாலட்சுமி சான்றிதழ் அளித்து கவுரவித்தார்.

