/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
விரைவில் கூட்டணி பேச்சுவார்த்தை காங்., எம்.பி., மாணிக்கம் தாகூர் பேச்சு

ADDED : ஜன 19, 2024 04:23 AM
விருதுநகர்: தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் விரைவில் கூட்டணி பேச்சுவார்த்தையை துவங்குவார், என எம்.பி., மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது:
இண்டியா கூட்டணி பேச்சு வார்த்தை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. காங். எம்.எல்.ஏ.,எம்.பி.க்களுக்கு அயோத்தி ராமர் கோயில் விழாவிற்கான அழைப்பு வழங்கப்படவில்லை. காங்., கட்சியினர் அயோத்தி ராமர் கோயிலுக்கு செல்ல விரும்புகின்றனர். 2 ஜி வழக்கு விசாரணை நீதிமன்றத்தால் நிராகரிகப்பட்டு 10 ஆண்டுகளை கடந்து விட்டது.
ஆனால் தற்போது அந்த வழக்கில் இடம்பெற்ற சாட்சிகளின் டேப்களை பா.ஜ., மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிடுவது வேடிக்கையாக உள்ளது. காங். சார்பில் மூத்த தலைவர் சிதம்பரம் தலைமையில் தேர்தல் வாக்குறுதி தயார் செய்யப்படுகிறது. தமிழகத்திற்கு மட்டும் நீட் விலக்கு பெற வேண்டும் என்பதில் தமிழக காங்., உறுதியாக உள்ளது, என்றார்.