/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
காமராஜ் பொறியியல் கல்லுாரியில் விண்வெளி கண்காட்சி
/
காமராஜ் பொறியியல் கல்லுாரியில் விண்வெளி கண்காட்சி
ADDED : ஜூலை 24, 2025 06:24 AM

விருதுநகர் : விருதுநகர் காமராஜ் பொறியியல் கல்லுாரியில் விண்வெளி காட்சி நடந்தது. மாணவர்கள் இந்தியாவின் பலவிதமான செயற்கைக் கோள்களின் மாதிரிகளை பார்வைக்கு வைத்தனர். இக்கண்காட்சிக்கு பெங்களூரு இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் குழு இயக்குனர் இங்கர்சால் செல்லத்துரை வந்திருந்தார்.
அவரிடம் ஓசன்சாட் 2 குறித்து மாணவர்கள் கூறியதாவது: ஓசன்சாட் 2 என்பது இஸ்ரோவின் மூலம் 2009 செப்.ல் அனுப்பப்பட்ட ஒரு புவி ஆய்வு செயற்கைக் கோள். இது கடல் ஆய்வுகளுக்கும், கால நிலை கணிப்பு, புவியியல் ஆய்வுகளுக்குமான முக்கிய தரவுகளை திரட்டியது. மேலும் கடலின் பரப்பு, வெப்ப நிலை, வளிமண்டல மாற்றங்களையும், கடல் நிறத்தையும், உயிரியல் செயல்பாடுகளையும் கண்காணிக்கவும் பயன் படுகிறது.
மீனவர்கள் மீன்களின் இருப்பை தெரிந்து கொள்ளவும் இந்தியாவுக்கான முக்கியமான உலகளாவிய கடல் ஆய்வுகளுக்கும் இது பயன்படுகிறது என்றனர்.
கல்லுாரி செயலாளர் தர்மராஜன், பொருளாளர் ஸ்ரீமுருகன், துணை தலைவர் பாலகிருஷ்ணன், முதல்வர் செந்தில் உடனிருந்தனர்.