/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஓட்டுச்சாவடி மையங்களில் இன்று சிறப்பு முகாம்
/
ஓட்டுச்சாவடி மையங்களில் இன்று சிறப்பு முகாம்
ADDED : நவ 16, 2025 04:32 AM
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் அந்தந்த ஓட்டுச்சாவடி மையங்களில் இன்று காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை சிறப்பு முகாம்கள் நடக்கிறது.
மாவட்டத்தில் இதுவரை 14 லட்சத்து 62 ஆயிரத்து 874 வாக்காளர்களுக்கான கணக்கெடுப்பு படிவங்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் வெளியூரில் பணிபுரிபவர்கள் தங்களுக்கான படிவங்களை பெற்று கொள்வதை எளிதாக்கவும், படிவங்களை நிரப்பவும், 2002ம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களை கண்டறிய உதவுவதற்காக அந்தந்த ஓட்டுச்சாவடி மையங்களில் இன்று காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை சிறப்பு முகாம்கள் நடக்கிறது.
வாக்காளர்களாக பதிவு செய்தவர்கள் இதுவரை கணக்கெடுப்பு படிவங்களை பெறாமல் இருந்தால் சிறப்பு முகாம்களில் பெற்றுக்கொள்ளலாம். இம்முகாமில் பூர்த்தி செய்த படிவத்தை பெறும் பணியை ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள், தன்னார்வலர்கள் மேற்கொள்வார்கள்.
பூர்த்தி செய்த படிவத்துடன் எந்த ஆவணத்தையும் இணைத்து வழங்க தேவையில்லை. வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் தொடர்பாக கலெக்டர் அலுவலகத்தின் 04562 1950 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் சுகபுத்ரா தெரிவித்தார்.

