/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கோயில்களில் தீபாவளி சிறப்பு வழிபாடு
/
கோயில்களில் தீபாவளி சிறப்பு வழிபாடு
ADDED : அக் 21, 2025 03:19 AM
விருதுநகர்: விருதுநகர் மாவட் டத்தில் கோயில்களில் தீபாவளி சிறப்பு வழிபாடு நடந்தது.
நேற்று தீபாவளியை முன்னிட்டு காலை முதலே மக்கள் எண்ணெய் தேய்த்து குளித்து விட்டு புத்தாடை அணிந்து கோயில்களுக்கு வரத் துவங்கினர்.
விருதுநகரில் வாலசுப்பிரமணியசுவாமி கோயில், பராசக்தி மாரியம்மன் கோயில், வெயிலு கந்தம்மன் கோயில், ராமர் கோயில், வழிவிடு விநாயகர், சிவகணேசன் கோயில்களில் பக்தர்கள் வழிபாடு செய்தனர். சிறுவர்கள் பட்டாசு வெடித்து மகிழ்ந்தனர்.
* அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் மீனாட்சி சொக்கநாதர் கோயில், முத்து மாரியம்மன் கோயில், அமுதலிங்கேஸ்வரர் கோயில், பத்ரகாளியம்மன் கோயில்களில் மக்கள் குடும்பத்தோடு வழிபாடு செய்தனர். ஆயிரங்கண் மாரியம்மன் கோயிலில் அம்மன் பூக்கள் அலங் காரத்தில் காட்சியளித்தார் பழனி ஆண்டவர் கோயிலில் முருகன் லட்டு அலங்காரத்தில் பக்தர் களுக்கு அருள்பாலித்தார்.