/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கண்மாய் உடைப்பெடுத்து வீணாகும் தண்ணீர்: --விவசாயிகள் வேதனை
/
கண்மாய் உடைப்பெடுத்து வீணாகும் தண்ணீர்: --விவசாயிகள் வேதனை
கண்மாய் உடைப்பெடுத்து வீணாகும் தண்ணீர்: --விவசாயிகள் வேதனை
கண்மாய் உடைப்பெடுத்து வீணாகும் தண்ணீர்: --விவசாயிகள் வேதனை
ADDED : அக் 21, 2025 03:19 AM

சத்திரப்பட்டி : ராஜபாளையம் அருகே தொடர் மழையால் கண்மாய் உடைப்படுத்து இரண்டு நாள் ஆகியும் அடைக்கும் பணி நடக் காததால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.
ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடி வாரம் இரவு நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கண்மாய்களுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது.
சத்திரப்பட்டி அடுத்த சமுசிகாபுரம் ஊராட்சியில் அச்சன்குளம் கண்மாய் நேற்று முன்தினம் இரவு முதல் உடைப் பெடுத்து தண்ணீர் வீணாகி வருகிறது. நேற்று மாலை வரை மண் மூடை வைத்து அடைக்கும் பணிகள் நடக்காததால் மேலும் பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சத்தில் விவசாயிகள் உள்ளனர்.
சங்கர், விவசாயி: ஏற் கனவே கருங்குளம் கண்மாய் நிறைந்து அதில் வெளியேறும் நீர் செங் குளம் கண்மாய் அடுத்து, மேல இழுப்பிலாங்குளம் கண்மாயில் பாய்ந்ததில் மடை அருகே 100 அடிக்கு உடைப்பு எடுத்து உள்ளது.
அதிலிருந்து கானாக் குளம் இலுப்பிலான் குளம், சத்திரப்பட்டி வாகைகுளம் சுற்றி அச்சன்குளம் சுற்றி வரவேண்டிய தண்ணீர் நேரடியாக அச்சங்குளத்திற்கு பாய்கிறது. ஆட்கள் பற்றாக்குறை காரணம் காட்டி பணிகளை தாமதப்படுத்தியுள்ளனர். விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராஜீவ் காந்தி, தாசில்தார்: அச்சன்குளத்தில் இருந்து வெளியேறும் கண்மாய் தரிசு நிலத்தில் செல்வதால் பாதிப்பு இல்லை. தற் போதைய நிலையில் எந்த ஒரு கண்மாயை அடைத் தாலும் குடியிருப்பு பகுதிக்கு சேதம் ஏற்படும் நிலை உள்ளது.
ஆதுரி, புளியங்குளம், கருங்குளம் நீர்வரத்தை மாற்றி விடுவதற்கு அதிகாரிகள் முகாமிட்டு கண்காணித்து விடுகின்றனர். இனி மழை அளவு குறையும் என்பதால் உடைப்பை சரி செய்யும் பணி வேகமாக முடி வடைந்து விடும்.