/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மலைவாழ் மக்களுக்கான சிறப்பு கிராம சபை கூட்டம்
/
மலைவாழ் மக்களுக்கான சிறப்பு கிராம சபை கூட்டம்
ADDED : ஜூலை 26, 2025 03:26 AM
ராஜபாளையம்: ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அய்யனார் கோயில் மலைவாழ் மக்களுக்கான சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. பி.டி.ஓ மகேஸ்வரன் தலைமை வகித்தார். ஊராட்சி செயலர் ராதாகிருஷ்ணன் தீர்மானங்களை முன்மொழிந்தார்.
ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் கிருஷ்ணாபுரம் ஊராட்சிக்குட்பட்ட அய்யனார் கோயில் அருகே மலைவாழ் மக்கள் குடியிருப்பில் 20 வீடுகள் உள்ளன. இதில் 100 க்கும் அதிகமானோர் வசிக்கின்றனர்.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் ஆறாவது மாநில நிதி குழு பரிந்துரையில் ரூ.20 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதில் 2000 லிட்டர் தரைமட்ட தண்ணீர் தொட்டி, பேவர் பிளாக் சாலை, உயர் கோபுர சோலார் மின்விளக்கு பணிகளை செய்ய ஒப்புதல் வழங்குவதற்கான கிராம சபை கூட்டம் நடந்தது. இதில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கு தடையில்லா சான்று பெற ஒப்புதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
கூட்டத்தில் உதவி பொறியாளர் ராம முனீஸ்வரன், வனவர் செல்வராஜ் உள்ளிட்ட
அதிகாரிகள் கலந்து கொண்டனர்.