/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர் கூட்டம்
/
மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர் கூட்டம்
ADDED : மார் 01, 2024 12:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர் : விருதுநகரில் மாவட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம் நடந்தது.
மாற்றுத்திறனாளி அடையாள அட்டை, உதவித்தொகை, இலவச தையல் இயந்திரம், ஸ்மார்ட் போன், பஸ் பாஸ், வேலைவாய்ப்பு, தொழில் துவங்குவதற்கான கடன் வசதி, அரசின் நலத்திட்டங்கள் உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக 300க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டது. 4 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.13 ஆயிரத்து 750க்கு திறன் பேசிகளையும், ஒரு மாற்றுத்திறனாளிக்கு ரூ.2200க்கு காதொலி கருவியையும், 19 பேருக்கு அடையாள அட்டைகளையும், 22 நபர்களுக்கு பஸ், ரயில் பாஸ்களையும் வழங்கப்பட்டது.

