/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நகராட்சி வார்டுகள் சிறப்பு கூட்டம்
/
நகராட்சி வார்டுகள் சிறப்பு கூட்டம்
ADDED : அக் 28, 2025 03:24 AM
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் நகராட்சி வார்டுகள் வாரியான சிறப்பு கூட்டங்கள் அந்தந்த கவுன்சிலர்கள் தலைமையில் நடந்தது.
மழைக்காலத்தை ஒட்டி நகராட்சிகளில் செய்யப்பட வேண்டிய முக்கிய பிரச்சனைகள், அடிப்படை வசதிகளை செய்ய, அந்தந்த நகராட்சி கவுன்சிலர்களின் தலைமையில் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என அரசு உத்தரவிட்ட நிலையில், நேற்று அருப்புக்கோட்டை நகராட்சியில் 18 வார்டுகளில் கவுன்சிலர் தலைமையில் சிறப்பு கூட்டம் நடந்தது.
நகராட்சி 8 வது வார்டில் நடந்த கூட்டத்திற்கு கவுன்சிலர் சிவப்பிரகாசம் தலைமை வகித்தார். மக்கள் தங்கள் பிரச்சனைகளை தீர்க்க கூறி கோரிக்கை வைத்தனர். பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு காணப்படும் என கவுன்சிலர் உறுதி அளித்தார். கூட்டத்தில் நகராட்சி கமிஷனர் ராஜமாணிக்கம், அலுவலக உதவியாளர் மாலதி, ஆர்.ஐ., கிருஷ்ணமூர்த்தி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

