
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி: சிவகாசி மாநகராட்சி 34 வது வார்டில் சிறப்பு கூட்டம் நடந்தது. மேயர் சங்கீதா தலைமை வகித்தார். கமிஷனர் சரவணன் முன்னிலை வகித்தார். வார்டு மக்கள் தங்களது குறைகளை தெரிவித்தனர்.
மேயர் கூறுகையில், அரசு அறிவித்தபடி மாநகராட்சியில் 48 வார்டுகளிலும் சிறப்பு கூட்டம் நடக்கிறது. இதில் அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்கின்றனர். மக்கள் தங்களது குறைகளை தெரிவிக்கலாம். அனைத்து குறைகளும் உடனடியாக சரி செய்யப்படும், என்றார்.

