/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சிறப்பு பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் முகாம்
/
சிறப்பு பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் முகாம்
ADDED : மார் 20, 2025 06:45 AM

சிவகாசி: சிவகாசி காளீஸ்வரி கல்லுாரியில் கல்லுாரி பயிற்சி, பணி வாய்ப்பு துறை, இந்திய அஞ்சல் துறை விருதுநகர் கோட்ட அலுவலகம் சார்பில் மாணவர்களுக்காக சிறப்பு பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் முகாம் நடந்தது.
கல்லுாரி செயலர் செல்வராஜன் தலைமை வகித்தார். கல்லுாரி முதல்வர் பாலமுருகன், துணை முதல்வர் முத்துலட்சுமி, விருதுநகர் கோட்ட அஞ்சல் அலுவலக துணை கண்காணிப்பாளர் சுப்பிரமணியம் பாண்டியன், அஞ்சல் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இரு நாட்கள் நடந்த முகாமில் 400 மாணவர்களுக்கு பாஸ்போர்ட் விண்ணப்பிக்கப்பட்டு அதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை கல்லுாரி பயிற்சி, பணி வாய்ப்பு துறை ஒருங்கிணைப்பாளர் மகேசன், பணி வாய்ப்பு துறை அலுவலர்ஹரிஹர பாண்டியன் செய்தனர்.