/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ரயில்வே தண்டவாளத்தில் கல் வைத்தவர்களை தேடும் பணியில் தனிப்படை போலீசார் தீவிரம்
/
ரயில்வே தண்டவாளத்தில் கல் வைத்தவர்களை தேடும் பணியில் தனிப்படை போலீசார் தீவிரம்
ரயில்வே தண்டவாளத்தில் கல் வைத்தவர்களை தேடும் பணியில் தனிப்படை போலீசார் தீவிரம்
ரயில்வே தண்டவாளத்தில் கல் வைத்தவர்களை தேடும் பணியில் தனிப்படை போலீசார் தீவிரம்
ADDED : நவ 13, 2024 06:25 AM
ஸ்ரீவில்லிபுத்தூர் : தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே ரயில்வே தண்டவாளத்தில் மீண்டும் கல் வைத்தவர்கள் குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே போலீசார் உட்பட நான்கு தனிப்படை சுற்றுவட்டார கிராமங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தென்காசி மாவட்டம் செங்கோட்டையிலிருந்து மதுரை, மயிலாடுதுறை, சென்னை, மேட்டுப்பாளையம், வேளாங்கண்ணி உட்பட பல்வேறு நகரங்களுக்கு பயணிகள் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயங்கி வருகிறது.
சில சிறப்பு ரயில்களும் அவ்வப்போது மதுரை, விருதுநகர், ராஜபாளையம், சங்கரன் கோயில், தென்காசி நகரங்களின் ரயில்வே வழித்தடத்தில் பயணிக்கிறது. ஏராளமான மக்கள் பயணிக்கின்றனர்.
இந்நிலையில் செப்.26ல் கடையநல்லூர் அருகில் சங்கனாப்பேரியில் ரயில்வே தண்டவாளத்தில் கல் வைக்கப்பட்டதில் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் தப்பியது.
இச்சம்பவத்தில் அப்பகுதியில் கல்குவாரியில் வேலை பார்த்த சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த பல்சிங் பகேல் 21, ஈஸ்வர் மைட்டியா 23, ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
மீண்டும் அக்.31ல் கடையநல்லூர் ரயில்வே ஸ்டேஷன் அருகே போக நல்லூரில் தண்டவாளத்தில் மீண்டும் கல் வைக்கப்பட்டிருந்தது.
இச்சம்பவம் குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
இதற்காக சம்பவ பகுதியை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த சந்தேகத்திற்குரிய நபர்கள், அலைபேசி தொடர்புகள் மூலம் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
ஆனாலும் இதுவரை யாரும் சிக்கவில்லை. இருந்த போதிலும் இரவு, பகலாக தனிப்படை போலீசார்கள் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

