/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ரயில் தண்டவாளத்தில் கல் வைத்தது யார் தனிப்படை போலீசார் விசாரணை
/
ரயில் தண்டவாளத்தில் கல் வைத்தது யார் தனிப்படை போலீசார் விசாரணை
ரயில் தண்டவாளத்தில் கல் வைத்தது யார் தனிப்படை போலீசார் விசாரணை
ரயில் தண்டவாளத்தில் கல் வைத்தது யார் தனிப்படை போலீசார் விசாரணை
ADDED : நவ 03, 2024 03:05 AM
ஸ்ரீவில்லிபுத்துார்:தென்காசி மாவட்டம் கடையநல்லுார் அருகே ரயில்தண்டவாளத்தில் மீண்டும் கல் வைக்கப்பட்ட சம்பவம் குறித்து 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
அக்.31 இரவு தென்காசி மாவட்டம் கடையநல்லுார் ரயில்வே ஸ்டேஷன் அருகே ஒரு கிலோ மீட்டர் தொலைவில் போகநல்லுாரில் ரயில்வே தண்டவாளத்தில் 10 கிலோ எடையுள்ள ஒரு கல் வைக்கப்பட்டு இருந்தது. இதனை பார்த்த பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் இன்ஜின் டிரைவர் ரயிலை நிறுத்தி கல்லை அப்புறப்படுத்தி மீண்டும் ரயிலை இயக்கினார். பின்னர் இது குறித்து ஸ்ரீவில்லிபுத்துார் ரயில்வே போலீசாருக்கும், ரயில்வே உயரதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தார்.
போலீசார் சம்பவ பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் விசாரித்தனர். ஆனால் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இதனையடுத்து ஸ்ரீவில்லிபுத்துார் ரயில்வே போலீசார், கடையநல்லுார் போலீசார், திருநெல்வேலி ரயில்வே டி.எஸ்.பி.இளங்கோ தலைமையில் ஒரு தனிப்படை, மதுரை ரயில்வே தனிப்படை போலீசார் உட்பட 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கல் வைத்தவர்களை தேடுகின்றனர்.