/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
விபத்திற்கு காரணமாகும் வேகத்தடைகள்
/
விபத்திற்கு காரணமாகும் வேகத்தடைகள்
ADDED : ஜூலை 29, 2025 11:56 PM
ராஜபாளையம் : ராஜபாளையம் நகர் பகுதி சாலைகளில் விதிமுறைகளை மீறி அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகளை அகற்றுவதுடன் ,இரவு நேரங்களிலும் தெரியும் வகையில் பிரதிபலிப்புடன் அமைக்கப்பட வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.
ராஜபாளையத்தில் தாமிரபரணி, பாதாள சாக்கடை பணிகளுக்காக தோண்டி புதிதாக அமைக்கப்பட்டுள்ள சாலைகளில் எந்த கட்டுப்பாடும் இன்றி வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. வேகத்தடைகள் அமைப்பதற்கு முன் இரண்டு பக்கமும் 10 மீட்டர் துாரத்திற்கு முன்பும், வேகத்தடைகள் மீதும் வெள்ளை நிறங்களில் எச்சரிக்கை கோடு வரைவது, அதன் சரிவு என சாலைகளில் விதிமுறைகளை பின்பற்றவில்லை.
குறிப்பாக ராஜபாளையம் மலையடிப்பட்டி ரயில்வே கேட் முதல் ரயில்வே மேம்பாலம் வரை உள்ள 1.5 கி.மீ மெயின் ரோட்டிற்கு 15 வேகத்தடைகளை அமைத்துள்ளனர். இவற்றில் எந்த வெள்ளை நிற பெயிண்டும், பிரதிபலிப்பான்களும் இல்லை.
ஆட்டோ, கார், டூவீலர்கள் செல்லும் போது வேகத்தடை இருப்பது தெரியாமல் கட்டுக்கோட்டை இழந்து விபத்து ஏற்படுவதுடன், வாகனங்கள் அடிக்கடி பழுதடைகின்றது. வேகத்தடைகளை அகற்றுவதுடன் அவசியமான இடங்களில் வெள்ளை பெயிண்ட் அடித்து வாகன ஓட்டிகளின் கண்ணுக்கு தெரியும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு பராமரிக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.