ADDED : பிப் 16, 2024 04:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தின் போலீஸ் அலுவலகம், சிறப்பு பிரிவுகளின் அலுவலகங்களை துாய்மை, ஆவணங்களை சிறப்பாக பராமரித்தல் செய்ததற்காக எஸ்.பி., அலுவலகத்தில் உள்ள பண்டகப்பிரிவும், சிறப்பு பிரிவுகளில் தொலைத்தொடர்பு பிரிவினரும் முதல் இடத்தை பெற்றனர்.
பணப்பிரிவு, மாவட்ட குற்றப்பதிவேட்டுக்கூடத்தினர் இரண்டாமிடத்தை பெற்றனர். இதில் முதல் இடம் பெற்றவர்களுக்கு சுழல் கோப்பை, தலா ரூ. 5 ஆயிரம், இரண்டாமிடம் வென்றவர்களுக்கு சுழல் கோப்பை, தலா ரூ. 3 ஆயிரத்தை எஸ்.பி., பெரோஸ் கான் அப்துல்லாவழங்கினார்.