/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
விளையாட்டு விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம்
/
விளையாட்டு விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம்
ADDED : ஜூலை 24, 2025 06:38 AM

சிவகாசி : சிவகாசி அய்யா நாடார் ஜானகி அம்மாள் கல்லுாரியில் உடற்கல்வியியல் துறை சார்பில் மூன்று நாள் விளையாட்டு விழிப் புணர்வு சைக்கிள் ஊர்வலம் நடந்தது.
கல்லுாரி முதல்வர் அசோக் கொடியசைத்து துவக்கி வைத்தார். கல்லுாரியில் துவங்கிய ஊர்வலம் ஸ்ரீவில்லிபுத்துார், ராஜபாளையம், தளவாய்புரம், வாசுதேவநல்லுார் கடையநல்லுார் வழியாக தென்காசி வரை 240 கிலோமீட்டர் பயணம் செய்து கிராம மக்களிடம் உடற்பயிற்சி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி திரும்பியது. கிராமம் கிராமமாக சென்று உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் பயனை வலியுறுத்தி துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை கல்லுாரி உடற்கல்வியியல் துறை தலைவர்கள் முருகன், ஜான்சன், துறை பேராசிரியர்கள் அருண் சங்கர், மீனாட்சி சுந்தரம், சிவானந்த பிரபு, வீரமணி, குருவபாண்டி, சூரியகுமார், அசோக், அன்பு நிஷா ஜெப சவுந்தா, ஞானகுரு செய்தனர்.