
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை எஸ்.பி.கே., பெண்கள் மேல்நிலை பள்ளி விளையாட்டு விழா நடந்தது. அருப்புக்கோட்டை நாடார்கள் உறவின் முறை தலைவர் காமராஜன் தலைமை வகித்தார்.
கல்வி குழும தலைவர் ஜெயக்குமார், கவுரவ ஆலோசகர் மனோகரன், பள்ளித் தலைவர் அறிவழகன் முன்னிலை வகித்தனர். செயலர் காசிகோபிநாத் வரவேற்றார். நகராட்சி தலைவர் சுந்தர லட்சுமி போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்.
பஸ் உரிமையாளர் மகாலிங்கம் பள்ளி கொடியை ஏற்றினார். தாசில்தார் பொன்ராஜ் ஒலிம்பிக் தீபம் ஏற்றினார். தொழிலதிபர் ராஜ்குமார் சமாதான புறாக்களை பறக்க விட்டார். ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர் தங்கரதி, ஆசிரியைகள் செய்தனர்.

