நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார் : கிருஷ்ணன்கோவில் லிங்கா குளோபல் பள்ளியில் விளையாட்டு விழா தாளாளர் ஸ்ரீதரன் தலைமையில் நடந்தது.
தலைவர் டாக்டர் அறிவழகி, இயக்குனர்கள் சசிஆனந்த், அர்ஜுன் கல்சலிங்கம் முன்னிலை வகித்தனர். முதல்வர் அல்காசர்மா வரவேற்றார். தனியார் தொண்டு நிறுவன தலைமை அதிகாரி ஜெசிலா ஏஞ்சலின் ஒலிம்பிக் தீபம் ஏற்றி போட்டிகளை துவக்கி வைத்தார். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தாளாளர் ஸ்ரீதரன் பரிசுகள் வழங்கினார். ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குனர் கருப்பசாமி, ஆசிரியர்கள் செய்தனர்.