/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் அலைபேசிக்கு நிர்வாகம் தடை கோயில் நிர்வாகம் முடிவு
/
ஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் அலைபேசிக்கு நிர்வாகம் தடை கோயில் நிர்வாகம் முடிவு
ஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் அலைபேசிக்கு நிர்வாகம் தடை கோயில் நிர்வாகம் முடிவு
ஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் அலைபேசிக்கு நிர்வாகம் தடை கோயில் நிர்வாகம் முடிவு
ADDED : டிச 28, 2024 01:33 AM
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பக்தர்கள், பட்டர்கள் அலைபேசி கொண்டு செல்லவும் வீடியோ, போட்டோ எடுப்பதற்கும் தடை விதிக்க கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் அலைபேசிகள் மூலம் போட்டோ எடுப்பது மட்டுமில்லாமல் வீடியோ கால் மூலம் வெளியூர், வெளி மாநிலம், வெளிநாடுகளில் வசிக்கும் தங்கள் உறவினர்களுக்கும் பேசுகின்றனர். பூஜைகள் நடக்கும் போது சுவாமி தரிசனம் செய்வதை விட்டுவிட்டு அலைபேசி மூலம் போட்டோ, வீடியோ எடுக்கின்றனர்.
டிச.15 ல் திருப்பாவை திவ்ய பாசுரம் நிகழ்ச்சிக்கு வந்த சினிமா இசைமைப்பாளர் இளையராஜா அர்த்த மண்டபத்திற்குள் நுழைந்ததாக சர்ச்சை வீடியோ வெளியானது. இதனையடுத்து கோயிலுக்கு வரும் பக்தர்கள் அலைபேசி, கேமராக்கள் மூலம் போட்டோ ,வீடியோ எடுப்பதற்கு கோயில் நிர்வாகம் தடை விதிக்க முடிவு செய்துள்ளது. மதுரை, திருச்செந்தூர், பழநி கோயில்களில் உள்ளது போல் பக்தர்களின் அலைபேசிகளை வாங்கி வைத்துவிட்டு சுவாமி தரிசனம் செய்துவிட்டு வந்த பின்பு திரும்ப கொடுப்பதற்காக உரிய ஏற்பாடுகளை செய்து வருகிறது.
இதுவரை வி.ஐ.பி.க்கள் வருகையின் போது வெள்ளிக் குறடு மண்டபம் வரை செய்தியாளர்கள் வீடியோ, போட்டோ எடுத்து வந்தனர்.
இனிமேல் கொடிமரம் வரை மட்டுமே போட்டோ, வீடியோ எடுக்க செய்தியாளர்களை அனுமதிக்கவும், சிறப்பு பூஜைகளின் போது கோயில் பட்டர்கள் போட்டோ எடுத்து சமூக வலைதள பக்கங்களில் பதிவிடவும் கட்டுப்பாடுகள் விதிக்க கோயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

