/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஸ்ரீகாகுளம்- கொல்லம் சபரிமலை சிறப்பு ரயில்
/
ஸ்ரீகாகுளம்- கொல்லம் சபரிமலை சிறப்பு ரயில்
ADDED : நவ 25, 2024 04:08 AM
விருதுநகர்: சபரிமலை பக்தர்களுக்காக ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் -- கொல்லம் இடையே சிறப்பு ரயில் டிச.,1 முதல் இயக்கப்படவுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் சபரிமலைக்கு ஏராளமான பக்தர்கள் வந்து செல்வர். இந்தாண்டும் அதிக அளவில் பக்தர்கள் வந்து செல்வார்கள் என்பதால் ஸ்ரீகாகுளத்தில் இருந்து (08553) சிறப்பு ரயில் டிச., 1 முதல் 2025 ஜன., 26 வரை ஞாயிறுகிழமைகளில் இயக்கப்படுகிறது. மறுமார்க்கத்தில் (08554) டிச., 2 முதல் 2025 ஜன., 27 வரை இயக்கப்படுகிறது.
இந்த ரயில் ஸ்ரீகாகுளத்தில் இருந்து காலை 6:00 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 2:30 மணிக்கு கொல்லம் வந்தடையும். மறுமார்க்கத்தில் திங்கள் கிழமைகளில் மாலை 4:30 மணிக்கு கொல்லத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் அதிகாலை 2:30 மணிக்கு ஸ்ரீகாகுளம் செல்கிறது.
போண்டுரு, சீப்புருப்பள்ளி, விஜயநகரம், கொத்தவலசா, பெண்டுர்த்தி, சிம்ஹாச்சலம் வடக்கு, துவ்வாடா, அனகபல்லே, சமல்கோட், ராஜமுந்திரி, எல்லுரு, விஜயவாடா, நெல்லுார், குடூர், ரேணிகுண்டா, காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போடனுார், பாலக்காடு, திருச்சூர், ஆலுவா, எர்ணாகுளம், ஏட்டுமனுார், சங்கனாச்சேரி, திருவல்லா, செங்கனுார், மாவேலிக்கரை, காயங்குளம் ஆகிய ஸ்டேஷன்களில் நின்று செல்லும். இதற்கான முன்பதிவு நடந்து வருகிறது.