/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஸ்ரீவி., பஸ் ஸ்டாண்டில் பழைய கடைகளை இடித்து புதிய கடைகள்
/
ஸ்ரீவி., பஸ் ஸ்டாண்டில் பழைய கடைகளை இடித்து புதிய கடைகள்
ஸ்ரீவி., பஸ் ஸ்டாண்டில் பழைய கடைகளை இடித்து புதிய கடைகள்
ஸ்ரீவி., பஸ் ஸ்டாண்டில் பழைய கடைகளை இடித்து புதிய கடைகள்
ADDED : செப் 25, 2024 03:34 AM
ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூரில் தற்போதைய பஸ் ஸ்டாண்டின் கிழக்கு பகுதியில் உள்ள கடைகளை இடித்துவிட்டு புதிதாக 29 கடைகள் கட்டும் பணிக்கு அக். 3ல் டெண்டர் விடப்பட்டு, விரைவில் பணிகள் துவங்கி ஓராண்டு காலத்திற்குள் புதிய கடைகளை பயன்பாட்டுக்கு கொண்டுவர நகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
60 ஆண்டுகளுக்கு முன்பு 17 பஸ்கள் நிற்கும் வகையில் கட்டப்பட்ட தற்போதைய பஸ் ஸ்டாண்டில் கடைகளின் கட்டுமானங்கள் சேதமடைந்து வருவதால் அதனை முழுமையாக இடித்து, புதிய கடைகள் கட்ட நகராட்சி நிர்வாகம் திட்டமிட்டது.
இதில் ரூ.3.5 கோடி மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதால் முதல் கட்டமாக 29 கடைகள் மட்டுமே புதிதாக கட்டுவதற்கு திட்டமிடப்பட்டு அதற்கான மண் பரிசோதனை கடந்த மாதம் மேற்கொள்ளப்பட்டது.
இதனையடுத்து புதிய கடைகள் கட்ட அக்.3ல் டெண்டர் விட நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இதன்படி பஸ் ஸ்டாண்டில் கிழக்கு பகுதியில் உள்ள கடைகள், லாட்ஜ், ஓட்டல், சுகாதார வளாகம் ஆகியவற்றை இடித்து விட்டு 29 கடைகள் புதிதாக கட்ட டெண்டர் விடப்பட்ட சில வாரங்களில் பணிகளை துவக்கி ஓராண்டு காலத்திற்குள் புதிய கடைகள் கட்டி முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக தற்போதைய கடை உரிமையாளர்களிடம், எதிர்வரும் நாட்களில் ஆலோசனை நடத்த நகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.