/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஸ்ரீவி., சக்கரை குளத்தை சுத்தப்படுத்த வேண்டுகோள்
/
ஸ்ரீவி., சக்கரை குளத்தை சுத்தப்படுத்த வேண்டுகோள்
ADDED : பிப் 11, 2025 04:43 AM
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் சக்கரைகுளத்தை சுத்தப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்துார் நகராட்சி சார்பில் ரு. 45 லட்சம் செலவில் பழுதுபார்க்கப்பட்ட சக்கரைகுளம் தற்போது கழிவுநீர் நீர் குட்டை போல் ஆகிவிட்டது. குப்பை, கழிவு, குடிகாரர்களால் குளம் நாசமாகி வருகிறது.
இதனருகில் குடியிருப்புகள் , அரசு ஆரம்ப சுகாதார நிலையம் , அம்மா உணவகம்இருப்பதால் குளத்தின் சுகாதாரக் கேட்டால் நோய் தொற்று ஏற்படுவதற்கு வழிவகுக்கிறது. இதனை நகராட்சி நிர்வாகம் உடனடியாக சரி செய்ய வேண்டுமென பக்தர்கள் விரும்புகின்றனர்.
விருதுநகர் மேற்கு மாவட்ட பா.ஜ.. தலைவர் ராஜா கூறுகையில், ஆன்மிக ஸ்தலாமான இக்குளத்தில் சீர்கேட்டை நகராட்சி சரி செய்து மக்கள் பயன்பெறும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

