/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஸ்ரீரங்கம் ரெங்கநாதருக்கு ஸ்ரீவி., ஆண்டாள் பட்டு
/
ஸ்ரீரங்கம் ரெங்கநாதருக்கு ஸ்ரீவி., ஆண்டாள் பட்டு
ADDED : ஏப் 25, 2025 01:41 AM

ஸ்ரீவில்லிபுத்துார்:திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் நாளை (ஏப்., 26) சித்திரை ரேவதி நட்சத்திரத்தை முன்னிட்டு நடைபெறும் தேரோட்டத்தின்போது ரெங்கநாதருக்கு சாற்றுவதற்காக விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் சூடிக்கொடுத்த பட்டு, கிளி, மங்களப் பொருட்கள் நேற்று கொண்டு செல்லப்பட்டது.
நேற்று மாலை 4:00 மணிக்கு ஆண்டாள் கோயில் கண்ணாடி மண்டபத்தில் எழுந்தருளிய ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு பட்டு, கிளி, மங்களப்பொருட்கள் சமர்ப்பிக்கப்பட்டு, பிரகாஷ் பட்டர் சிறப்பு பூஜைகள் செய்தார். திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பின் ஸ்தானிகம் பிரசன்னா தலைமையில் பட்டு, கிளி, மங்களப்பொருட்கள் கோயில் பிரகாரம் சுற்றி வந்த பின் ஸ்ரீரங்கத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் வெங்கட்ராமராஜா, செயல் அலுவலர் சக்கரையம்மாள், கோயில் பட்டர்கள் செய்தனர்.